கால்வாயில் விழுந்து 6 பிள்ளைகளின் தந்தை மரணம்!
police
death
tharmapuram
By Vanan
தர்மபுரம் காவல் நிலைய பிரிவிற்கு உட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் மது போதையில் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் தவறுதலாக கால்வாயில் விழுந்து பலியாகியுள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்று (09) இடம்பெற்றுள்ளது. நேற்றிரவு வேலை முடித்து வீடு திரும்பிய நிலையில், அருகில் இருந்த கால்வாயில் தவறுதலாக விழுந்து இறந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆறு பிள்ளைகளின் தந்தையான, இராமலிங்கம் புஸ்பராஜ் வயது(51)என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபரை உறவினர்கள் தேடிய சமயம் மதியமளவில் உறவினர்களால் அவர் இறந்த நிலையில் இருப்பது இனங்காணப்பட்டு தர்மபுர காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்திருந்த காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.