மீன் பிடிக்க சென்ற பல்கலை மாணவனுக்கு நடந்த துயரம்!
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பகுதியில், பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தோணி கவிழ்ந்து நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆற்றில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நிலையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கோட்டைக்கல்லாறை சேர்ந்த 25வயதுடைய சுசிதரன் தனூஷன் என்ற இளைஞனே இவ்வாறு நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளார்.
காவல்துறை விசாரணை
களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஓந்தாச்சிமடம் ஆற்றில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நிலையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த இளைஞன் கிழக்கு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்தின் இறுதியாண்டு மாணவன் எனவும் பல்கலைக்கழக விடுமுறையில் வீடுவந்திருந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இளைஞனை தேடும் பணிகள்
இளைஞன் காணாமல்போயுள்ளமை குறித்து களுவாஞ்சிகுடி காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த இளைஞனை தேடும் பணிகளில் காவல்துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.

மேலும், இளைஞன் இதுவரையில் மீட்கப்படாத நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி காவல்துறையினர் முன்னெடுத்துவருகின்றனர்.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        