வித்யா கொலை வழக்கு மரண தண்டனை கைதி சிறையில் உயிர் மாய்ப்பு
புங்குடுதீவு - வித்யா படுகொலை வழக்குடன் தொடர்புடைய மரண தண்டனை கைதி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
யாழ். சிறைச்சாலையில் இன்று காலை அவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பூபாலசிங்கம் ஜெயகுமார் என்ற கைதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசாரணை
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குற்றவாளிகளுக்கு ஏற்கனவே யாழ்ப்பாணம் உச்ச நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் தமக்கு வழங்கப்பட்ட தீர்ப்பினை மீள் பரிசீலனை செய்யுமாறு கொழும்பு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தனர்.

அதன்பின்னர் கொழும்பு நீதிமன்றமும் அந்த தீர்ப்பினை உறுதி செய்தது. அதன்பின்னர் அந்த தீர்ப்பு வாசிப்பிற்காக அவர்களை யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றில் இன்றையதினம் முன்னிலைப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது.
அதன்படி நேற்றையதினம் அவர்கள் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டனர்.
இந்நிலையில் குறித்த கைதி இன்று அதிகாலை உயிர்மாய்த்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலதிக செய்தி - பு.கஜிந்தன்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |