மிச்சிகன் தேவாலய துப்பாக்கிச் சூடு: அமெரிக்காவை உலுக்கிய கோர சம்பவம்
அமெரிக்காவின் மிச்சிகன் தேவாலயத்தில்(Michigan church) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நால்வர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் 9 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
க்ராண்ட் ப்ளாங்க் டவுன்ஷிப்பில் உள்ள மோர்மன் தேவாலயத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் ஆராதனையில் ஈடுபட்டிருந்த போதே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
வன்முறை தொற்றுநோய்
இது தொடர்பில் தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தில் பதவிட்டுள்ள அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “இந்தக் கொடிய துப்பாக்கிச் சூடானது கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்” என சாடியுள்ளார்.
நமது நாட்டில் இந்த வன்முறை தொற்றுநோய் உடனடியாக முடிவுக்கு வர வேண்டும் எனவும் டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
துப்பாக்கிதாரி பலி
பர்ட்டனைச் சேர்ந்த ஒருவர் அவரது லொறியை தேவாலயத்தின் நுழைவாயிலில் மோதி, துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்பட்டதையடுத்து, துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் சம்பவ இடத்திலேயே அந்நாட்டு காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தை "குறிவைக்கப்பட்ட வன்முறைச் செயல்" என அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் தெரிவித்து வருவதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
