உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு என்பது கேலிக்கூத்தான விடயம் அல்ல: சஜித் பிரேமதாச தெரிவிப்பு
“உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு என்பது கேலிக்கூத்தான விடயம் அல்ல, இந்த விடயத்தில் இலங்கை சாதனை படைத்து இருக்கிறது” என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்றையதினம்(06) இடம்பெற்றுவரும் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கொண்டவாறு குறிப்பிட்டுள்ளார்
கொள்ளையடிக்கும் செயற்பாடு
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வங்கி கட்டமைப்பு போன்றவற்றை அகற்றி விட்டு முழுமையான உள்நாட்டு கடன் சுமையை நாட்டு மக்கள் மீது சுமத்திய முதலாவது நாடாக இலங்கை சாதனை படைத்துள்ளதாகவும் தேசிய உள் நாட்டு கடன் மறுசீரமைப்பு செயற்பாடானது உழைக்கும் மக்களுடைய EPF பணத்தை கொள்ளையடிக்கும் செயற்பாடாகும்.

முதன்மை பத்திர விற்பனையாளர்களுக்கு ( PRIMARY BOND DEALERS ) அதிக லாபம் ஏற்படுத்துகின்ற அதே நேரம் உழைக்கும் மக்களினுடைய பணத்தை கொள்ளையடிக்கும் இந்த செயற்திட்டத்தை எதிர்க்கின்றோமே தவிர தாங்கள் இடையூறு ஏற்படுத்தவில்லை” என்றார்.