கொரோனாவால் உயிரிழப்பவர்களை இரணைதீவில் புதைக்கும் தீர்மானம்- முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம்!
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடலை கிளிநொச்சி இரணைமடு பகுதியில் அடக்கம் செய்வது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் குறித்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இரணைதீவு பகுதி மக்கள் நாளை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர். அத்துடன் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் இரணை தீவு பங்கு தந்த மடுத்தீன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், முஸ்லிம் சகோதரர்களால் பல்வேறுபட்ட பகுதிகள் முன்னொழியப்பட்ட போதிலும், அவற்றைத் தவிர்த்து யுத்தத்தால் இடம் பெயர்ந்து பல இன்னல்கள் மத்தியில் 2017 ஆண்டு பல போராட்டங்களின் பின்னர் மக்கள் குடியேறியுள்ள எமது இரணைதீவு பகுதிகளில் உடல்களை அடக்கம் செய்ய மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் கவலை அழிப்பதுடன் தங்களுக்கு மகிழ்சி இன்னைமையையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் இரணைதீவு பகுதியானது நீரேந்து பிரதேசமாக காணப்படுவதனால் கொரோனா தொற்றுள்ள உடல்களை புதைபதனால் நீரூடாக தொற்றுபரவ வாய்புள்ளதாகவும், அண்மைக் காலமாகவே இரணைதீவு மக்கள் குடியேறி படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பிவருகின்ற நிலையில் அரசாங்கத்தின் இம்முடிவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதிலை எனவும் தெரிவித்துள்ளார்.
தற்போது 165 குடும்பங்கள் அட்டை பண்ணைகளை அமைத்து அங்கு வசித்து வருவதால் அவர்களின் பாதுகாப்பும் கேள்விகுறியாகியுள்ளது. எனவே மக்கள் அனைவரும் இணைந்து நாளைய தினம் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதுடன் யாழ்பாண மனித உரிமை அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்றையும் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவுத்துள்ளார்.


