முட்டை விலை குறித்து வெளியான தகவல்
அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் முட்டை ஒன்றின் விலையை 10 ரூபாயினால் குறைக்க தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, பெரிய அளவிலான முட்டை உற்பத்தியாளர்களின் மாஃபியாவை நிறுத்தும் நோக்கில் முட்டைகளின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடயத்தினை அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் நவோத் சம்பத் பண்டார குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளை முட்டையின் விலை
அதன்படி, வெள்ளை முட்டை ஒன்றின் விலை 18 ரூபாயாகவும், சிவப்பு முட்டை ஒன்றின் விலை 20 ரூபாயாகவும் விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, சந்தை நிலவரம் பற்றிய சரியான புரிதல் இல்லாத ஒருவரின் விருப்பின் அடிப்படையில், முட்டைகளின் விலையை குறைப்பது ஆபத்தானது என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் உலக முட்டை தினத்தை முன்னிட்டு நேற்று (10) நடைபெற்ற நிகழ்ச்சியில், கலந்துகொண்ட ருஹுணு பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ ஆய்வுகள் துறையின் தலைவர் பேராசிரியர் இந்துனில் பத்திரண, நாட்டில் முட்டை உற்பத்தியை ஏற்றுமதி செய்ய விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையுடன் இணைந்து பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
