மன்னார் மனித புதைகுழி விசாரணை: எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
மன்னார் (Mannar) மனித புதை குழி தொடர்பிலான வழக்கு மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்டது.
குறித்த வழக்கு நேற்றைய தினம் (07) கலந்துரையாடல் வடிவில் விவாதிக்கப்பட்டது.
இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சார்பாக சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் மன்றில் முன்னிலையாகியிருந்தார்.
மனிதபுதைகுழி
விசாரணைகளின் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சார்பாக மன்றில் முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் கருத்து தெரிவிக்கையில், “இந்த வழக்கு விசாரணையின் போது நீதி மன்றத்தால் பல்வேறு கட்டளைகள் பிறப்பிக்கப்படிருந்தது.
குறிப்பாக பேராசிரியர் ராஜ்சோம தேவ் தலைமையில் சதோச மனிதபுதைகுழி பகுதியில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஸ்கான் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், மனித புதை குழியில் மீட்கப்பட்ட என்புகள் மற்றும் பிற பொருள் மாதிரிகளை வெவ்வேறாக பிரித்தெடுப்பதற்கான தீர்மானமும் எட்டப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை
அத்துடன், என்புகளை பால், வயது, மரணத்திற்கான காரணம் தொடர்பில் ஆரய்வதற்கான செய்ற்பாடுகளை முன்னெடுக்குமாறும் ஏனைய சான்று பொருட்களை பேரசிரியர் ராஜ் சோம தேவியிடம் கையளிக்குமாறும் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த வழக்கு மேலதிக விசாரணைகளுக்காக ஒக்டோபர் மாதம் திகதியிடப்பட்டுள்ளது.” என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த வழக்கு விசாரணையில் அகழ்வுக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி ராஜபக்ச,பேராசிரியர் ராஜ்சோம தேவ், காணாமல் போனோர் சங்க பிரதிநிதிகள், OMP அலுவலக பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |