இலங்கையின் வாகன இறக்குமதி மற்றும் விற்பனையில் வீழ்ச்சி ஏற்படும் அபாயம்!

Central Bank of Sri Lanka Sri Lanka Sri Lankan Peoples vehicle imports sri lanka
By Sathangani May 26, 2026 03:38 AM GMT
Report

இலங்கையில் வாகனங்கள் வாங்குவதற்காக வழங்கப்படும் கடன் வசதிகளில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களால், வாகன இறக்குமதி மற்றும் விற்பனையில் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.

அத்துடன், தற்போதைய சூழ்நிலையில் வாகனங்களின் விலை உயரும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கும், அபாயங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் மோட்டார் வாகனங்களுக்காக வழங்கப்படும் கடன் வசதிகளின் (லீசிங்) எல்லைகளை நேற்று (25) முதல் மட்டுப்படுத்துவதற்கு மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

எரிபொருள் விலையில் உயர்வு! ஆய்வாளர்கள் எதிர்வுகூறல்

எரிபொருள் விலையில் உயர்வு! ஆய்வாளர்கள் எதிர்வுகூறல்

மத்திய வங்கி அறிவிப்பு 

அதன்படி, புதிய திருத்தத்தின்படி, நாட்டில் பதிவுசெய்து ஒரு வருடத்திற்கும் மேலாகப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கு வழங்கப்படும் கடன் வசதி 60 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், அதிநவீன வாகனங்கள் மற்றும் நாட்டில் பதிவுசெய்து ஒரு வருடத்திற்கும் குறைவாகப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கு வழங்கப்படும் குத்தகை வசதியும் இன்று முதல் குறைக்கப்படும் என்று மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இலங்கையின் வாகன இறக்குமதி மற்றும் விற்பனையில் வீழ்ச்சி ஏற்படும் அபாயம்! | Decline In Vehicle Imports And Sales In Sri Lanka

அதன்படி, பாரவூர்திகள் உள்ளிட்ட வர்த்தக வாகனங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட 70 சதவீத கடன் வசதி, புதிய திருத்தத்தின்படி 60 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

சிற்றூந்துகள், SUV ரக வாகனங்கள், சிற்றூர்திகள், முச்சக்கரவண்டிகள் மற்றும் ஏனைய வாகனங்களுக்கு முன்னர் 50% ஆகக் காணப்பட்ட கடன் வசதி 40% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கடந்த ஆண்டு நவம்பர் 8 ஆம் திகதி முதல் நேற்று வரை வழங்கப்பட்ட பதிவு செய்யப்படாத வாகனங்களுக்கான கடன் வசதியும் திருத்தப்பட்டுள்ளது.

அட்டாளைச்சேனையில் சட்டவிரோத கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது

அட்டாளைச்சேனையில் சட்டவிரோத கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது

மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தம் 

மேலும் கடந்த ஆண்டு ஜூலை 18 ஆம் திகதி முதல் நவம்பர் 8 ஆம் திகதி வரை வழங்கப்பட்ட பதிவு செய்யப்படாத வாகனங்களுக்கான கடன் வசதியும் திருத்தப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஆண்டு ஜூலை 18ஆம் திகதிக்கு முன்னர் கடன் கடிதம் பெறப்பட்டு பதிவு செய்யப்படாத வாகனங்களுக்கான கடன் வசதியும் திருத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் வாகன இறக்குமதி மற்றும் விற்பனையில் வீழ்ச்சி ஏற்படும் அபாயம்! | Decline In Vehicle Imports And Sales In Sri Lanka

அதன்படி, வர்த்தக வாகனங்களுக்கான கடன் வசதி 90 சதவீதமாகத் திருத்தப்பட்டுள்ளது. இதற்கமைய சிற்றூந்துகள், SUV ரக வாகனங்கள் மற்றும் சிற்றூர்திகளுக்கான கடன் வசதி 50 சதவீதமாகவும், முச்சக்கரவண்டிகளுக்கு 25 சதவீதமாகவும் திருத்தப்பட்டுள்ளது.

அதேபோல், இலகுரக ட்ரக் வண்டிகளுக்கு 90 சதவீதமாகவும், மற்ற வாகனங்களுக்கு 70 சதவீதமாகவும் வழங்கப்படும் கடன் வசதிகள் திருத்தப்பட்டுள்ளன. எனினும், இந்த வகைகளைச் சேர்ந்த மின்சார வாகனங்களுக்கான கடன் வசதி 90 சதவீதமாகத் திருத்தப்பட்டுள்ளது.

மேலும், ஹைபிரிட் வகையைச் சேர்ந்த SUV ரக வாகனங்கள், சிற்றூர்திகள் மற்றும் சிற்றூந்துகளுக்கு வழங்கப்படும் கடன் வசதி 50 சதவீதமாகத் திருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறைக்கப்பட்ட வாகனங்களுக்கான லீசிங் வசதி! இறக்குமதியாளர்கள் சங்கம் அதிருப்தி

குறைக்கப்பட்ட வாகனங்களுக்கான லீசிங் வசதி! இறக்குமதியாளர்கள் சங்கம் அதிருப்தி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025