அதிகரிக்கும் டெங்குநோய் - மக்களுக்கு எச்சரிக்கை
srilanka
batticaloa
people
dengue
By Vasanth
ட்டக்களப்பு - கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2021ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து இதுவரையான காலப்பகுதியில் 84 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி, வைத்தியர் எஸ்.ரீ.நஜீப்கான் தெரிவித்தார்.
இதேவெளை - குறித்த பிரிவிலுள்ள பிறைந்துரைச்சேனை, வாழைச்சேனை ஆகிய பிரதேசங்களிலுள்ள வீடுகளில் டெங்கு நுளம்பு குடம்பிகள் காணப்படுகின்ற இடங்களை அடையாளப்படுத்தி மக்களுக்கு தெளிவூட்டும் நடவடிக்கையும், வீடுகளை பரிசோதனை செய்யும் நடவடிக்கையும் இன்று (24) வைத்தியர் எஸ்.ரீ.நஜீப்கான் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது டெங்கு நோய் பரவும் வகையில் நீர் தாங்கி மற்றும் கழிவுகளை வைத்திருந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டனர்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி