யாழை சேர்ந்த காவல்துறை பிரதி பொறுப்பதிகாரி பாம்பு கடித்து பலி!
அநுராதபுரம், உடமலுவ காவல்துறையின் பிரதி பொறுப்பதிகாரியாகப் பணியாற்றி வந்த தலைமைக் காவல்துறை பரிசோதகர் நேற்று (22) பாம்பு கடித்து உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர், யாழ்ப்பாணம் - நயினாதீவி பகுதியில் வசித்து வந்த 59 வயதான அங்குல்கம கமுவகே சரத் தர்மசிறி என்ற காவல்துறை உத்தியோகத்தரே ஆவார்.
அநுராதபுரம் தலைமையக காவல்துறை வழங்கியுள்ள தகவல்களின்படி, தர்மசிறி ஒரு காலத்தில் அநுராதபுரம் தலைமையக காவல்துறையிலும் பணியாற்றியுள்ளதோடு, குற்றப் புலனாய்வுப் பிரிவின்" (SOCO) OIC ஆகவும் கடமையாற்றியுள்ளார்.
உயிரிழப்பு
கடந்த 19 ஆம் திகதி மாலை வேலை முடித்து வீடு திரும்பிய தர்மசிறி, தனது பயிர் செய்கை நடவடிக்கைகளை கண்காணிக்க வீட்டின் பின்னால் உள்ள தோட்டத்திற்குச் சென்றிருந்த போது, வாழை புதருக்கு அருகில் ஒரு பாம்பு அவரைக் கடித்ததாகக் கூறப்படுகிறது.
பாம்பு கடித்த உடனேயே தர்மசிறி அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து, அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு நான்கு நாட்கள் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
you may like this...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 5 மணி நேரம் முன்
