காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் வழங்கிய அனுமதி!
காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு சட்ட உதவி வழங்கும் "சட்ட நிவாரணத் திட்டத்திற்கு" காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் அனுமதியளித்துள்ளார்.
ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்தார்.
காவல்துறையினர் தங்கள் கடமைகளைச் செய்யும் போது எதிர்கொள்ளும் சட்டச் சிக்கல்களுக்காக தனிப்பட்ட சட்ட உதவியைப் பெற இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சட்ட நிவாரணத் திட்டம்
இது தொடர்பான அமைச்சரவைப் பிரேரணை பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் அவர்களினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கு முன்னர் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒரு காவல்துறை அதிகாரி ஒருவர் தனது கடமைகளின் எல்லைக்குள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பில் சட்ட சிக்கல்களுக்கு முகங்கொடுக்கும் பட்சத்தில் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் அதற்கு அரசாங்க சட்ட உதவியை வழங்க மறுக்கும் அல்லது அது தொடர்பான சட்ட உதவிகளை வழங்காத சந்தர்ப்பங்களில், ஒரு தனியார் சட்டத்தரணி மற்றும் பிற சட்ட சேவைகளின் உதவியைப் பெறுவதற்கு காவல்துறையினர் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடிகளுக்கு இந்த முறை நிவாரணமாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |