இந்திய விளையாட்டு வீரர்களில் அதிக வருமான வரி செலுத்தும் வீரர் யார் தெரியுமா!
இந்திய விளையாட்டு வீரர்களில் அதிக வருமான வரி செலுத்துவோரின் பட்டியல் வெளியாகி உள்ளது.
குறித்த பட்டியலை ஒரு இந்திய (India) தனியார் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் முதலிடத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி (Virat Kholi) உள்ளார்.
விராட் கோலி
அந்தவகையில், இந்திய அணியின் வீரரான விராட் கோலி ரூ.66 கோடி வருமான வரி கட்டி வருவதாக தெரியவருகின்றது.
2-வது இடத்தில் மகேந்திரசிங் தோனி (MS.Dhoni) உள்ளார். சிஎஸ்கே வீரரும் முன்னாள் இந்திய வீரருமான தோனி ரூ.38 கோடியை வருமான வரியாக கட்டி வருவதாக தெரியவருகின்றது.
3-வது இடத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் சச்சின் டெண்டுல்கர் உள்ளார்.
அவர் வருமான வரியாக மட்டும் ரூ.28 கோடி கட்டி வருகிறார்.
மகேந்திரசிங் தோனி
4-வது இடத்தில் முன்னாள் இந்திய வீரர் சௌரவ் கங்குலி உள்ளார்.
அவர் ரூ.23 கோடி வருமான வரியாக கட்டி வருவதாக தெரியவருகின்றது.
அதேபோல் சகலதுறை ஆட்டக்காரரான ஹர்திக் பண்டியா ரூ.13 கோடியை வருமான வரியாகவும், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ரூ.10 கோடியையும் வருமான வரியாக கட்டி வருகிறார்.
இந்த பட்டியலில் இந்திய அணித்தலைவர் ரோகித் சர்மா (Rohith sharma) முதல் 20 இடங்களில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |