இலங்கையிலிருந்து தப்பிச் சென்றாரா மகிந்த ...!(காணொளி)
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச நாட்டில் இல்லை. அவர் நேற்று நள்ளிரவு அவன்கார்ட் சிப் ஊடாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் என தெரிவிக்கப்படுவதாக அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
மகிந்த நாட்டில் இல்லாததன் பின்னர்தான் திருகோணமலையில் இருப்பதாக கூறியுள்ளனர். அவரை கைது செய்ய கோரி பலதரப்பினரிடம் இருந்து அழுத்தங்கள் வலுப்பெற்று வருகின்றது. அவர் திருகோணமலையில் இருப்பாரானால் நிச்சயமாக தம்பி அரச தலைவராக இருப்பதனாலும், பாதுகாப்பு அமைச்சு இருப்பதனாலும் அவரை கைது செய்ய வேண்டி வரும்.
அதற்கான ஏற்பாடுகள் நிறையவே இருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்த மேலதிக விடயங்கள் காணொலியில்...
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        