யாழில் பரிதாபமாக உயிரிழந்த மூன்று பிள்ளைகளின் தந்தை
Sri Lanka Police
Jaffna
By Vanan
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கோப்பாய் பிரதான வீதியில் இயங்கி வரும் வாகன திருத்தகம் ஒன்றில் வாகனத்தில் மின் பாய்ச்சி ஒட்டும் போது குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மூன்று பிள்ளைகளின் தந்தை
யாழ்ப்பாணம் ஆத்திசூடி வீதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான செல்வராசா சுஜிதரன் (வயது 40) என்பவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை கோப்பாய் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி