சீனி நிறுவனங்களின் இலாபம்: திறைசேரிக்கு வழங்கப்பட்ட1.24 பில்லியன் ரூபா
இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம 1.24 பில்லியன் ரூபாவை திறைசேரிக்கு வழங்கியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவனகல மற்றும் பெலவத்த ஆகிய இரண்டு சீனி நிறுவனங்களின் இலாபமே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் திறைசேரி செயலாளரிடம் காசோலை மூலம் இந்த தொகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு
இத்தொகையை செலுத்துவதன் மூலம், இலங்கை சீனி நிறுவன ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்குவதற்கு அரசாங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் உள்ள நிபந்தனைகள் பூர்த்தியாகின்றதாக நம்பப்படுகின்றது.
2023ஆம் ஆண்டின் இறுதியில், ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்கும் புதிய முறையும் அறிமுகப்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் இவ்வருடத்தில் 07 பில்லியன் ரூபாவை திறைசேரிக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |