இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையே விமானச்சேவை : இடம்பெற்றுள்ள முக்கிய கலந்துரையாடல்
Colombo
Sri Lanka
Pakistan
By Shalini Balachandran
கொழும்பில் (Colombo) இருந்து இஸ்லாமாபாத்துக்கு (Islamabad) நேரடி விமான சேவையை தொடங்குவதன் மூலம் விமான தொடர்பை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய இலங்கையும் பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது, கொழும்பில் இருந்து பாகிஸ்தானின் (Pakistan) லாகூர் மற்றும் கராச்சிக்கு மட்டுமே நேரடி விமானங்கள் இயக்கப்படுகின்றன.
விமான சேவை
அத்தோடு, விமான சேவையை அதிகரிப்பதன் அவசியம் குறித்து கலந்துரையாடுவது தொடர்பாக சந்திபொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பானது, இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தானின் மத அலுவல்கள் மற்றும் சர்வமத நல்லிணக்க அமைச்சர் சௌத்ரி சாலிக் ஹுசைன் மற்றும் புத்தசாசன அத்தோடு மத மற்றும் கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க ஆகியோருக்கு இடையில் இடம்பெற்றுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்