மட்டக்களப்பில் கனரக வாகனத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்: இருவர் படுகாயம்
மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி மியான்குளம் சந்தியில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் மத குருமார்கள் இருவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தானது நேற்றையதினம்(26) மாலை இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த இருவரும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மதகுருமாருக்கு சிகிச்சை
வெலிக்கந்தையிலிருந்து கிரான் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் வழியிலேயே மதகுருமார்கள் விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
வெலிக்கந்தைப் பகுதியில் இருந்து கிரான் பகுதிக்கு மோட்டார் சைக்கிளும் மட்டக்களப்பில் இருந்து வெலிக்கந்தை நோக்கி எதிரே வந்த கனரக வாகனமும் மோதியதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து விபத்திற்குள்ளான மதகுருமார்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்துடன் தொடர்புடைய கனரக வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனுடன் கனரக வாகனம் கைப்பற்றப்பட்டு காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |