ரணில் பக்கம் சாய்ந்த அலி சாஹிர் மௌலானா : எடுக்கப்படவுள்ள நடவடிக்கை
நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானாவுக்கு (Ali Zahir Moulana) எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) தீர்மானித்துள்ளது.
முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிசாம் காரியப்பரினால் (Nisham Kariyappar) இது தொடர்பான கடிதம் அலி சாஹிர் மௌலானாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது கடந்த 4 ஆம் திகதி நடைபெற்ற கட்சியின் உயர்பீடக் குழுக் கூட்டத்தில் நீண்ட விவாதங்களுக்குப் பிறகு, ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை (Sajith Premadasa) ஆதரிக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
ஒழுக்காற்று நடவடிக்கை
எனினும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) ஆதரவளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா நேற்று (16) அறிவித்திருந்தார்.
இந்தநிலையில், கட்சியின் தீர்மானத்துக்கு, எதிராக செயற்பட்டமையினால் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் வேண்டுகோளின் பிரகாரம் குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ரவூப் ஹக்கீம் பணிப்பு
எனவே, ரவூப் ஹக்கீம் (Rauff Hakeem) வழங்கிய பணிப்புக்கு இணங்க கட்சியில் உங்கள் உறுப்புரிமை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அந்தக் கடித்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்கவுக்கு நீங்கள் வழங்கிய ஆதரவை பற்றிய ஊடகங்களின் செய்தி தவறானதாக இருந்தால் அல்லது கட்சியின் முடிவுகளை மீறுவதற்கு சரியான மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணம் இருந்தால், கடிதம் மூலமாக அல்லது வாட்சப் மூலமாகவும் இந்த கடிதத்திற்கு நீங்கள் உடனடியாக பதிலளிக்கலாம் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |