குளியாபிட்டி போதனா வைத்தியசாலையில் பலருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிப்பு
Sri Lanka
Corona Virus
Kuliyapitiya
By Vasanth
குளியாபிட்டி போதனா வைத்தியசாலையில் 14 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளது. குறித்த வைத்தியசாலையின் ஊழியர்களுக்கு நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போதே இவ்வாறு தொற்று உறுதியானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அவர்களை ஐ.டி.எச் வைத்தியசாலை மற்றும் நாரம்மலையில் அமைந்துள்ள கொவிட் - 19 சிகிச்சை நிலையத்திற்கும் அனுப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் தொற்று உறுதியானவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி