486 பேரின் உயிரைப் பறித்த “டித்வா” புயல்
சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 486ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
மேலும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 341 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலோர் கண்டி மற்றும் நுவரெலியாவைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரிடர் குறித்து அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவு
மோசமான இந்த பேரழிவின் போது மாவட்டங்களில் 519,842 குடும்பங்களைச் சேர்ந்த 1,844,055 பேர் கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2,303க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாகவும் 52,489 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.
வடக்கு மாகாணத்தில் மன்னார் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள 124,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்நிலையில், உணவு, மருத்துவ உதவி மற்றும் தற்காலிக தங்குமிடம் வழங்க அவசரகால மீட்புக் குழுக்கள் 24 மணி நேரமும் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |