மோட்டார் சைக்கிள் பதிவு பணிகள் மீண்டும் ஆரம்பம்...!
ஐந்து மாவட்டச் செயலகங்கள் மூலம் புதிய மோட்டார் சைக்கிள்களைப் பதிவு செய்யும் வசதியை மீண்டும் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் இது குறித்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இதனடிப்படையில் எதிர்வரும் 19ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தலைமை அலுவலகம்
அதன்படி, யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை, அநுராதபுரம், குருநாகல் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டச் செயலகங்களில் பதிவுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
இந்தச் சேவை முன்னர் மேற்கூறிய மாவட்டச் செயலகங்கள் மூலம் வழங்கப்பட்டு வந்தது ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக அது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

அதன்படி, குறித்த மாவட்டங்களைச் சேர்ந்த உரிமையாளர்கள் ஒரு புதிய மோட்டார் சைக்கிளைப் பதிவு செய்ய நாரஹேன்பிட்டியில் உள்ள மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத் தலைமை அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது.
எனினும் இந்த பணிகள் மீண்டும் ஆரம்பமாகும் பட்சத்தில் அவர்களது அசௌகரியங்கள் பெரும்பாலும் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |