சமஷ்டியை வழங்க முடியாது - ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வு - விடாப்பிடியாய் இருக்கும் சிறிலங்கா!
சமஷ்டி தீர்விற்கு நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் அதனை ஒருபோதும் வழங்க முடியாது, தமிழ்த் தலைவர்களும் அதனைக் கேட்க வேண்டாம்.
இவ்வாறு இராஜாங்க அமைச்சர் கே.டபிள்யூ. சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
சமஷ்டி தீர்வு தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வு

வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் அன்றிருந்து இன்று வரை அரசியல் தீர்வைக் கோரி வருகின்றனர், அதனால்தான் நாட்டின் அதிபர் வடக்கு நோக்கி செல்லும் போதெல்லாம் அங்கே ஆர்ப்பாட்டங்கள் ஏற்படுகின்றன.
தமிழ் மக்கள் கோரும் அரசியல் தீர்வு கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும், அதுவும் ஒற்றையாட்சிக்குள் அதிகாரம் பகிரப்படுவதையே நாங்கள் விரும்புகின்றோம்.
காவல்துறை அதிகாரம் வழங்கப்பட மாட்டாது எனவும், நாட்டைப் பிளவுபடுத்த இடமளிக்க முடியாது எனவும் அதிபர் ரணில் கோரி வரும் நிலையில், தமிழ் அரசியல் தலைவர்கள் சிலர் அதற்கு எதிராக கதைத்து வருகின்றனர்.

தமிழ் அரசியல் தலைவர்கள் தொடர்ந்து அரசியலில் இருப்பதற்காகவே வழங்கப்பட முடியாத சமஷ்டி தீர்வைக் கேட்டு வருகின்றனர்.
நாம் ஒற்றையாட்சிக்குள் தீர்வை வழங்கத் தயாராக உள்ளோம் என இராஜாங்க அமைச்சர் கே.டபிள்யூ. சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.