கறிவேப்பிலையை தவறியும் கைகளில் கொடுக்கக்கூடாதாம் : காரணம் இது தான்
அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களை மற்றவர்களுக்கு கொடுக்கும் பொழுது சில வழக்கங்களை பின்பற்றுவது வழமை, அதன்பொருட்டு சில பொருட்களை இரவில் வழங்கக் கூடாது, சிலபொருட்களை பரிசாக கொடுக்கக்கூடாது, வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் சில பொருட்களை கொடுக்கக்கூடாது என பல முறைகளை நமது முன்னோர்கள் பின்பற்றி வந்துள்ளனர்.
சாஸ்திரமாக பார்க்கப்படும் இந்த வழக்கங்கள் மூடநம்பிக்கைகளாக அல்லாமல் அறிவியல் காரணம் கொண்டதாக இருப்பது தற்போது நிரூபணமாகி வருகின்ற உண்மைகள் என்றால் அதில் மறுப்பதற்கு ஒன்றுமில்லை.
அந்த வழக்கங்களில் ஒன்றாக சில பொருட்களை கைகளில் கொடுக்கக்கூடாது என்று சொல்லப்படுவது வழக்கம், அந்தப் பொருட்களில் ஒன்று தான் அன்றாடம் நாம் உணவுக்காக பயன்படுத்தும் கறிவேப்பிலை.
எதிர்மறை சக்தி
ஆரோக்கியத்திற்காகவும், வாசனைப்பொருளாகவும், கூந்தலுக்கு உகந்த மருந்துப் பொருளாகவும் இருக்கும் இந்த கறிவேப்பிலையை ஏன் கைகளில் கொடுக்கக்கூடாது என்று சொல்லப்படுகிறது என்பதை தெரிந்துகொள்வோம்.
கறிவேப்பிலைக்கு எதிர்மறை சக்திகளை ஈர்க்கும் ஆற்றல் அதிகமாக இருக்கிறது. இது பலருக்கும் எதிர்மறை ஆற்றலை தான் வழங்கும், இதை ஒருவருடைய கையில் நேரடியாக வழங்கினால் அவர்களுக்கு எதிர்மறை ஆற்றல் கடத்தப்படும்.
உதாரணமாக, நீங்கள் ஒருவர் கையில் கறிவேப்பிலையை வழங்கும் போது அவருக்கும் உங்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படும் வாப்பு அதிகமாக இருக்கிறது.
நச்சு தன்மையை போக்கும்
எனவே தான் வீட்டின் முற்றத்தில் கறிவேப்பிலை மரம் வளர்ப்பதையும் முன்னோர்கள் தடை செய்துள்ளனர்.
நீங்கள் நினைப்பது போன்று இதை சுவைக்காக சமையலுக்கு பயன்படுத்தவில்லை. சமையில் சிறிய அளவில் இருக்கும் நச்சு தன்மையை போக்குவதற்காகவும் கறிவேப்பிலை பயன்படுத்தப்படுகிறது.
கறிவேப்பிலையில் எதிர்மறை ஆற்றல் அதிகமாக இருக்கின்றது என்பது அறிவியல் உண்மை. எனவே உறவை நல்ல முறையில் பேண வேண்டும் என நினைப்பவர்கள் கையில் கறிவேப்பிலையை வழங்குவதை தவிர்த்துக்கொள்வது சிறந்ததாகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |