அரசாங்க அதிகாரிகளுக்கு பணம் கொடுக்காதீர்கள்: மக்களுக்கு கடுமையான எச்சரிக்கை
அரச சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் போது எந்தவொரு அரச அதிகாரிகளோ அல்லது அரசியல்வாதிக்கோ இலஞ்சம், பணம் அல்லது அன்பளிப்புகளை வழங்க வேண்டாம் என விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த பொதுமக்களிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் விளக்குகையில்,
கடந்த கால அரசாங்கங்கள்
அரச அதிகாரிகளுக்கான சம்பளத்தை அரசாங்கமே வழங்குகின்றது.

அந்தச் சம்பளம் போதுமானதாக இல்லையெனில், அரசாங்கம் அதனை உயர்த்தி வழங்கும்.
கடந்த கால அரசாங்கங்களும் சம்பளத்தை உயர்த்தின, தற்போதைய அரசாங்கமும் சம்பளத்தை உயர்த்தி வருகின்றது.
எதிர்காலத்தில் அமையவிருக்கும் அரசாங்கங்களும் சம்பளத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கும். எனவே, அரச சேவைகளைப் பெறுவதற்காக பொதுமக்கள் அரச அதிகாரிகளுக்கு தனியாகப் பணம் செலுத்த வேண்டிய எந்தவொரு தேவையும் இல்லை.” என கூறப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |