ரணில் - அநுர கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டாம் : சஜித் வேண்டுகோள்
ரணில், அநுர கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதால் உங்களுடைய வாக்கை திருடர்களை பாதுகாக்கும் கூட்டமைப்புக்கு வழங்கி வீணாக்க வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு நேற்று (05) மினுவாங்கொடையில் (Minuwangoda) ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த 34 ஆவது மக்கள் வெற்றி பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ”அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) ஜனாதிபதியாகுவார் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) கருத்து அமைகின்றது.
வாக்களிக்குமாறு வேண்டுகோள்
பச்சை யானைக் குட்டிகளும், சிவப்பு யானைக் குட்டிகளும் இன்று ஒன்றாக சேர்ந்து இருக்கின்றது. இதனூடாக ரணில் விக்ரமசிங்கவுக்கு வெற்றி பெற முடியாது என்பது வெளிப்படையாகியுள்ளது.
எனவே உங்கள் வாக்குகளை வீணடிக்காமல் நாட்டைக் கட்டி எழுப்புவதற்காக ஐக்கிய மக்கள் சக்திக்கும் (SJB), ஐக்கிய மக்கள் கூட்டமைப்புக்கும் (UPFA) வாக்களிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்களிடம் (UNP) வேண்டுகோள் விடுக்கின்றோம்.
மக்கள் விடுதலை முன்னணி
எவரேனும் ஒருவர் மக்கள் விடுதலை முன்னணிக்கோ, அநுரகுமார திசாநாயக்காவிற்கோ வாக்களிப்பார்கள் என்றால், அது திருடர்களை பாதுகாக்கின்ற ஜனாதிபதியுடன் ஒன்றாக இணைந்து செயற்படுகின்ற குழுவிற்கு வழங்குகின்ற வாக்காகும்.
அரச ஊடகங்களில் அநுர குமார திசாநாயக்கவுக்கு வழங்கப்படுகின்ற அதிக சந்தர்ப்பத்தின் ஊடாக ரணில், அனுர ஒப்பந்தம் இன்று உண்மைப்படுத்தப்பட்டு இருக்கின்றது“ என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |