“களுகங்கையின் இரு கரைகளிலும் நடமாட வேண்டாம்” என எச்சரிக்கை
weather
sri lanka
people
By Shalini
இரத்தினபுரி மாவட்டத்தில் பல இடங்களிலும் கடும் மழை பெய்து வருவதால் களுகங்கையின் கிளை ஆறுகளான குகுளேகங்க குடாஓய ஆகிய ஆறுகள் பெருக்கெடுத்துள்ளன.
இதனால், கலு கங்கையை சூழவுள்ள பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. .
இதனால் களுகங்கையின் நீர்மட்டம் துரிதமாக அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் இரத்தினபுரி காரியாலய அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
இதனால் களுகங்கையின் இரு கரைகளிலும் நடமாட வேண்டாம் என நீர்ப்பாசனத் திணைக்களம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலைமையால் பாலிந்தநுவர மில்லெனிய ஹொரண தொடங்கொட களுத்துறை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படலாம் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.