இவரைத் தெரியுமா? தகவல் அளித்தால் கிடைக்கவுள்ள மில்லியன் கணக்கான பணம்
police
people
information
By Jaso
கடந்த 26ஆம் திகதி முல்லேரியா காவல்துறை பிரிவுக்குட்பட்ட மீகஹவத்த பகுதியில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு மற்றுமொருவரை காயப்படுத்திய சம்பவத்தில் சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ள 'ஜில்' எனப்படும் பொன்னம்பெரும ஆராச்சிகே டொன் தனுஷ் புத்திக (வயது 30) என்பவரை அடையாளம் காண உதவுமாறு காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
சந்தேக நபர் தொடர்பில் துல்லியமான தகவல்களை வழங்கும் நபருக்கு 2.5 மில்லியன் ரூபாவை வழங்க பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளதாக சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் காவல்துறை பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.