தோல்வியை நோக்கி செல்கிறதா மக்கள் போராட்டம்! வைத்தியர் அர்ச்சுனாவின் தற்போதைய நிலை
Jaffna
Jaffna Teaching Hospital
Dr.Archuna Chavakachcheri
By Aadhithya
9 months ago
அர்ஜுனனின் தோல்வியை மகாபாரதம் பார்த்ததில்லை என வைத்தியர் அர்ச்சுனா (Dr. Archuna) தெரிவித்துள்ளமை மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
முகநூலில் இட்ட பதிவொன்றிலேயே வைத்தியர் அர்ச்சுனா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
என்னை மன்னியுங்கள்
அவர் மேலும் கூறியுள்ளதாவது, ”தற்பொழுது பதிவிடாமல் இருப்பதற்கு என்னை மன்னியுங்கள், நான் தற்பொழுது அவ்வாறு செய்தால் அது சாவகச்சேரி வைத்தியசாலையில் (Chavakachcheri Base Hospital) அமைதியின்மையை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.
மேலும், பிரச்சினை இப்போது நாடாளுமன்ற மட்டத்தில் இருப்பதாகவும் முடிவு எழுதப்பட்ட படிவத்திற்கு வந்தவுடன் அது தொடர்பில் தெரியப்படுத்தப்படும் எனவும் அதுவரை மக்களை பொறுமையாக கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்