உலக முடிவை பார்க்கச் சென்ற மருத்துவர்களுக்கு ஏற்பட்ட நிலை
உலக முடிவைப் பார்க்கச் சென்ற மருத்துவர்கள் குழு சென்ற கார்மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் மருத்துவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த மருத்துவர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மடோல்சிம காவல்துறையினர் தெரிவித்தனர்.
ராகம வைத்தியசாலையில் கடமையாற்றும் 38 வயதுடைய மருத்துவரே விபத்தில் சிக்கியுள்ளார்.
உலக முடிவைக் காணச் சென்று
நேற்று (09) பிற்பகல் பல்கலைக்கழக நண்பர்களான எட்டு வைத்தியர்கள் இரண்டு கார்களில் உலக முடிவைக் காணச் சென்று கொண்டிருந்த போது, மடோல்சிம, கொககல தீன்வத்த பிரதேசத்தில் வீதிக்கு அருகில் இருந்த மரத்தின் கிளை ஒன்று கார் ஒன்றின் மீது விழுந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மருத்துவர் மத்திகஹதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அவசர சிகிச்சை வழங்கியதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சத்திரசிகிச்சை
பதுளை போதனா வைத்தியசாலையின் நரம்பியல் நிபுணர் டொக்டர் லக்மால் ஹேவகே உள்ளிட்ட மருத்துவர்கள் குழுவினால் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
