டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்: இன்றைய நாணயமாற்று வீதம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (09) நாணயமாற்று விகிதங்களை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 318 ரூபா 30 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 328 ரூபா 93 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 387 ரூபா 83 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 403 ரூபா 46 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
யூரோ
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 334 ரூபா 61 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 349 ரூபா 47 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 231 ரூபா 74 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 242 ரூபா 63 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 200 ரூபா 87 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 211 ரூபா 39 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 231 ரூபா 66 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 242 ரூபா 28 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
விற்பனைப் பெறுமதி
அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.
கடந்த வாரத்தைப் போன்று இன்றும் (09) டொலரின் பெறுமதி நிலையாகவுள்ளது.
அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 316.18 ரூபாயாகவும் விற்பனைப் 329.37 ரூபாயாகவும் மாறாமலுள்ளது.
கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 317.68 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 328 ரூபாயாகவும் மாறாமலுள்ளது.
அதேபோல் சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே 318 ரூபாய் மற்றும் 328 ரூபாயாக மாறாமலுள்ளமை குறிப்பிடத்தக்கது.