முல்லைத்தீவில் கரையொதுங்கிய டொல்பின்கள்!
Mullaitivu
Department of Wildlife
Srilanaka
Dolphins
By MKkamshan
முல்லைத்தீவு கடற்கரையில் உயிரிழந்த நிலையில் டொல்பின்கள் கரையொதுங்கியுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு -அலம்பில் கடற்கரையிலிருந்து சுமார் 2 கிலோமீற்றர் தூரத்துக்கு உயிரிழந்த நிலையில் ஒன்பது டொல்பின்களின் உடல்கள் சிதறிக் காணப்பட்டதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இறந்த மீன்களின் உடல்களில் பிளாஸ்டிக் துண்டுகள் காணப்பட்டதாகவும் 2 முதல் 6 அடி நீளம் கொண்ட மீன்கள் என்றும் வனஜீவராசிகள் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைக்காக உடற் பாகங்கள் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 12 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்