அரசால் தடைவிதிக்கப்பட்ட வலைகளைப் பயன்படுத்த வேண்டாம்:கிழக்கு ஆளுநர் அறிவுரை
திருகோணமலையில் நேற்றைய தினம் (13) கடற்தொழிலாளர்கள் சட்ட விரோத கடற்தொழிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்த நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களை இன்று (14) ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்தனர்.
இந்நிலையில் குறித்த பிரச்சினை தொடர்பாக கடற்தொழிலாளர் சங்கத்தினருடனும், கடற்படையினர், கரையோர பாதுகாப்பு படையினர், காவல்துறை அதிகாரிகள், அதிரடிப் படையினர் ஆகியோருடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்த கூடாது எனவும், சட்ட விரோத கடற்தொழிலில் ஈடுபடுபவருக்கு எதிராக கடற்தொழில் திணைக்களம், கரையோர பாதுகாப்பு படையினர், காவல்துறை அதிகாரிகள், அதிரடிப் படையினர் ஆகியோரை சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கடற்தொழிலாளர் அமைப்புக்கு ஆதரவளிக்கும் வகையில் ஆளுநர் கருத்து வெளியிட்டார்.
