எலான் மஸ்க் காலை முத்தமிடும் ட்ரம்ப் : வைரலாகும் காணொளியால் சர்ச்சை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), எலான் மஸ்க்கின் (Elon Musk) காலில் முத்தமிடுவது போன்ற காணொளி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
குறித்த காணொளி, அமெரிக்காவின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை (HUD) தலைமையகத்தின் Cafeteria (கஃபேட்டிரியா) திரைகளில் ஒளிபரப்பாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட குறித்த காணொளியில் ”நிஜ ராஜா நீடூழி வாழ்க” (LONG LIVE THE REAL KING) என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.
வைரலாகும் காணொளி
இச்சம்பவம் HUD இன் பாதுகாப்பு அமைப்புகளில் ஏற்பட்ட பலவீனத்தை எடுத்துக்காட்டுகிறது எனவும் இது டொனால்ட் ட்ரம்புக்கு பெரும் அவமானத்தை தேடித் தந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில், குறித்த சம்பவம் இடம்பெறக் காரணமானவர்கள் யார் என்பது தொடர்பில் தீவிர விசாரணை இடம்பெற்று வருவதாக HUD செய்தித் தொடர்பாளர் கேசி லவெட் தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், உண்மையில் அது தான் வெள்ளை மாளிகையில் நடக்கிறது எனவும் சில அமெரிகர்கள் விசனம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்