யாழ்ப்பாண கடற்றொழிலாளர்களுக்கு கடற்படையின் அவசர அறிவிப்பு
யாழ்ப்பாணம் (Jaffna) கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் கடற்றொழிலாளர்களுக்கான அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
வடக்கு பருத்தித்துறை கடற்பரப்பிற்குள் (p423, p433, p483) ஆகிய கப்பல்களுக்கு சூட்டு பயிற்சி இடம்பெறவுள்ளது.
குறித்த சூட்டு பயிற்சி எதிர்வரும் (02.03.2025) காலை 09.00 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை இடம்பெறவுள்ளது.
இலங்கை கடற்பரப்பு
இந்தநிலையில், மேற்குறிப்பிட்ட கடற்பிரதேச எல்லைக்குள் கடற்றொழிலாளர்கள் பிரவேசிப்பதை தவிர்க்குமாறு யாழ். கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள உதவி பணிப்பாளரால் அனைத்து கடற்றொழில் சங்கங்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபடுவதை தடுப்பதற்கு இந்திய ஒன்றிய மற்றும் தமிழக அரசாங்கம் என்பன உரிய காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்(Ramalingam Chandrasekar) கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் சத்தியஞ்சல் பாண்டே உடன் நேற்று (25) இடம்பெற்ற சந்திப்பின் போதே கடற்றொழில் அமைச்சர் இதனை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 4 மணி நேரம் முன்
