ரஷ்யாவிற்கு வெளிப்படையான அச்சுறுத்தல்
தாய் நாட்டிற்காகவும் அதன் எதிர்காலத்திற்காகவும் டொன்பாஸ்சில் நிலைகொண்டுள்ள படையினரும் தன்னார்வலர்களும் போராடுவதாக ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ரஷ்யா மீதான படையெடுப்புக்கு மேற்குலக நாடுகள் தயாராகி வருவதாக ரஷ்ய அதிபர் குற்றஞ்சாட்டியு்ளளார்.
இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியன் நாசி ஜெர்மனியை வென்றதன் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வெற்றிவிழா அணிவகுப்பு சிவப்பு சதுக்கத்தில் நேற்று இடம்பெற்றது.
இந்த வெற்றிவிழாவில் உரையாற்றிய விளாடிமீர் புடின், நேட்டோ இராணுவ கூட்டணி, ரஷ்யாவிற்கு வெளிப்படையான அச்சுறுத்தல் என சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த வகையில் உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கை அவசியமானது எனவும் படை நடவடிக்கையை மேற்கொள்வதற்கு மேற்கொண்ட தீர்மானம் சரியானது எனவும் விளாடிமீர் புடின் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனில் யுத்தத்தால் துன்பப்படும் குடும்பங்களுக்கு தமது அரசாங்கம் அனைத்தையும் மேற்கொள்ளும் என ரஷ்ய அதிபர் உறுதி அளித்துள்ளார்.
ஒவ்வொரு இராணுவ வீரர் மற்றும் அதிகாரிகளின் மரணங்கள் வேதனை அளிக்கின்றது எனவும் ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரஷ்யாவின் சிவப்பு சதுக்கத்தில் இருந்த வீரர்களின் ஆரவாரம் மற்றும் ரஷ்ய தேசிய கீதத்துடன் விளாடிமீர் புடின் தனது உரையை நிறைவுசெய்துள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
