இலங்கை விரைகிறது டோர்னியர் ரக விமானம்
colombo
sri lanka
navy
india air
By Vanan
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா உதவ முன்வந்துள்ளது.
குறித்த கப்பலில் ஏற்பட்ட தீ கப்பலின் கட்டுப்பாட்டுப் பிரிவிற்குள்ளும் பரவியதாக இன்று மாலை இலங்கை கடற்படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தக் கப்பலில் ஏற்பட்ட தீயில் கப்பலில் பணியாற்றிய இரண்டு இந்தியப் பிரஜைகள் காயமடைந்ததோடு, மேலும் 25 பணியாளர்கள் காப்பாற்றப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் கப்பலில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த இந்தியாவின் அவசர தீ விபத்தின்போது நீர்த்தாரை தூவுவதற்குப் பயன்படுத்தப்படும் டோர்னியர் (Dornier) ரக விமானம் மற்றும் கடலோரக் காவல்துறையினரது ஒருசில படகுகளும் கொழும்புத் துறைமுகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்