கோட்டாபயவின் உரை பயனற்றது! வீதிக்கிறங்கி போராட அஞ்சபோவதில்லை - முருத்தெட்டுவே ஆனந்த தேரர் எச்சரிக்கை

SriLanka Ananda Thero Gotobhaya
By Chanakyan Jun 25, 2021 09:34 AM GMT
Report

அரசாங்கம் பொறுப்பற்ற வகையில் செயற்படுமாயின் மகாசங்கத்தினரை ஒன்றினைத்து வீதிக்கிறங்கி அரசாங்கத்திற்கு எதிராக போராடவும் அஞ்சபோவதில்லை என அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சுபீட்சமாக எதிர்கால கொள்கைக்கு முரணாகவே அரசாங்கம் செயற்படுகிறது. மக்களை நெருக்கடிக்குள்ளாக்கி ஒருபோதும் நாட்டை முன்னேற்ற முடியாது என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிந்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அபயராம விகாரையில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். 

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், 

அரசாங்கம் மீது மக்கள் அதிருப்தியடைந்துள்ளார்கள். ஆகவே ஜனாதிபதி நாட்டு மக்கள் மத்தியில் ஆற்றும் உரை பயனற்றதாகவே கருதப்படும். தேசியத்திற்கு முரணாக அரசாங்கம் செயற்படுகிறது. நாட்டை பிற தரப்பினருக்கும் விற்கும் கொள்கைக்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளது.

அரசாங்கம் பதவி காலத்தை நிறைவு செய்வதற்குள் நாடு இருக்குமா என்ற சந்தேகம் தற்போது தோற்றம் பெற்றுள்ளது. 

நல்லாட்சி அரசாங்கம் மக்களின் எதிர்பார்ப்புக்கு முரணாக செயற்பட்டது. அக்காலக்கட்டத்தில் தேசியத்திற்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் காரணமாகவே நாட்டு மக்கள் 2019 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.

ஆட்சி மாற்றத்தினால் அரச சுகபோகங்கள் கிடைக்கப் பெறும் என்று கருதி தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கவில்லை. பலமான தலைமைத்துவத்தின் ஊடாக நாடு முன்னெற்றமடையும் என எதிர்பார்த்தோம்.

எமது எதிர்பார்ப்பு தவறு என்பதை தற்போது உணர்ந்துக் கொண்டுள்ளோம். அரசாங்கம் மீதான நம்பிக்கை முழுமையாக இல்லாதொழிந்து விட்டது. ஆனால் நாட்டு மக்கள் அரசாங்கம் மீது கொண்ட நம்பிக்கை இல்லாமல் போவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.

உர பற்றாக்குறையினால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். விவசாயிகளுக்கு தேவையான உரத்தை இலவசமாக வழங்குவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தில் உரத்தை அதிக விலைக்கு கூட பெற முடியாத நெருக்கடி நிலை தோற்றம் பெற்றுள்ளது.

விவசாயிகளின் பிரச்சினைக்கு அரசாங்கம் உடனடியாக தீர்வு வழங்க வேண்டும். இல்லாவிடின் அவர்களுடன் ஒன்றினைந்து அரசாங்கத்திற்கு எதிராக போராட வேண்டிய நிலை ஏற்படும். ஆளும் தரப்பினர் உறுப்பினர்கள்.

அடுத்த தேர்தலில் மக்கள் மத்தியில் வாக்கு கேட்டு செல்ல தயாராக வேண்டாம். சுபீட்சமான எதிர்கால கொள்கைக்கு முரணாகவே அரசாங்கம் செயற்படுகிறது. பஷில் ராஜபக்க்ஷ வந்தவுடன் எரிபொருள் விலை குறைவடையும் என்று ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள்.

அவ்வாறின் எரிபொருள் விலையேற்றத்தை அரசியல் சூழ்ச்சி என்றே கருத வேண்டும். நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்கி நாட்டை முன்னேற்ற முடியாது என்பதை ஜனாதிபதி புரிந்துக் கொள்ள வேண்டும்.

தேசியத்திற்கு முரணாகவே அரசாங்கம் செயற்படுகிறது. அரசாங்கம் பதவி காலத்தை நிறைவு செய்வதற்கு முன்னர் வானில் தோன்றும் சூரியனையும், நிலவையும் கூட விட்டு வைக்கமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தேசிய வளங்கள் பிற நாட்டவர்களுக்கு விற்கப்படுவதை அவதானிக்க முடிகிறது.

தவறை திருத்திக் கொண்டு அரசாங்கம் சிறந்த முறையில் செயற்பட வேண்டும். இல்லாவிடின் மகா சந்கத்தினரை ஒன்றினைத்து அரசாங்கத்திற்கு எதிராக வீதிக்கிறங்கி போராடுவோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020