வடக்கு - கிழக்கு கடலில் மாத்திரம் இந்திய மீனவர்களுக்கு அனுமதி? அமைச்சர் டக்ளஸ்
srilanka
douglas devananda
By Vasanth
சட்டரீதியான முறைகளில் வடக்கு - கிழக்கு கடலில் மீன்பிடிக்க இந்திய மீனவர்கள் அனுமதிக்கப்படுவர் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இதற்கான ஆலோசனை தற்போது இடம்பெற்று வருவதாக ஊடகமொன்றுக்கு அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகளை இராஜதந்திர ரீதியாக தீர்த்துக் கொள்ளும் நோக்கில் இந்த ஆலோசனையை செயற்படுத்த முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மாத்திரம் இந்திய மீனவர்கள் சட்டரீதியான அனுமதிக்கப்பட்ட முறைமைகளை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்