தீயுடன் சங்கமம் ஆனார் ஈழத்து தமிழ் நாடகத்தின் ஆளுமை குழந்தை ம.சண்முகலிங்கம்

Sri Lanka
By Harrish Jan 20, 2025 04:27 PM GMT
Report

ஈழத்து தமிழ் நவீன நாடக உலகின் தாய் என்று வர்ணிக்கப்படுகின்ற கலாநிதி ம.சண்முகலிங்கத்தின் (குழந்தை) இறுதிக்கிரியை இன்று(20) இடம்பெற்றுள்ளது.

1931ஆம் ஆண்டு  ஒக்டோபர் 15ஆம் திகதி திருநெல்வேலியில் பிறந்த இவர் கடந்த 17.01.2025 அன்று இறையடி சேர்ந்தார்.

இவர் நீர்கொழும்பில் தங்கொட்டுவ கிராமத்தில் தன் தந்தை வேலை செய்த தென்னை எஸ்ரேட்டில் வளர்ந்தவர். இங்கு அடிநிலை சிங்கள, தமிழ் மக்களோடு வாழ்ந்திருக்கிறார்.

ஏமாற்றப்பட்டனரா ஈழத்தமிழர்கள்! விடுதலை புலிகளின் தலைவருடன் சீமான் இருக்கும் புகைப்படத்தால் சர்ச்சை

ஏமாற்றப்பட்டனரா ஈழத்தமிழர்கள்! விடுதலை புலிகளின் தலைவருடன் சீமான் இருக்கும் புகைப்படத்தால் சர்ச்சை

தமிழ்நாடக உலகின் பேராளுமை

ஆங்கிலம், தமிழ், சிங்களம் மூன்று மொழிகளிலும் புலமையுள்ளவர். நூறுக்கு மேற்பட்ட சுய ஆக்க நாடகங்களையும் அறுபதிற்கு மேற்பட்ட மொழிபெயர்ப்பு நாடகங்களையும் தமிழ் நாடக உலகிற்கு தந்த பேராளுமை.

இவரது ஆற்றலும் ஆளுமையுமே நாடகமும் அரங்கியலும் என்ற பாடத்துறை தமிழில் வளர்ச்சியடையக் காரணமாக அமைந்தது.

ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றதன் பின்னர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கியலும் துறையை உருவாக்குவதில் பேராசிரியர் கா.சிவத்தம்பியுடன் இணைந்து பணியாற்றியவர்.

தீயுடன் சங்கமம் ஆனார் ஈழத்து தமிழ் நாடகத்தின் ஆளுமை குழந்தை ம.சண்முகலிங்கம் | Dr M Shanmugalingam Passed Away

திருநெல்வேலி இந்து வாலிபர் சங்கத்தில் விதானை செல்வரத்தினத்துடன் இணைந்து நகைச்சுவை நாடகங்களை நடித்ததிலிருந்து இவரது நாடக வாழ்க்கை ஆரம்பமாகிறது.

யாழ்ப்பாணத்தில் நடந்த தமிழாராய்ச்சி மாநாட்டில் இவரது வையத்துள் தெய்வம் என்ற நாடகம் முதன்முதலில் மேடையேறியது. இதன் பின்னர் நாடகங்களை எழுத ஆரம்பிக்கிறார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நாடக டிப்ளோமா பயிற்சியை தனது 45ஆவது வயதில் பெற்றுக்கொள்கிறார். பின்னர் யாழ்ப்பாணத்தில் நாடக அரங்கக்கல்லூரியை உருவாக்கியவர்.

உலகப் புகழ்பெற்ற நாடகர் தாஸிசியஸ் உடன் இணைந்து ஈழத்து நாடகர்களுக்கு தொடர்பயிற்சியை வழங்கியவர். நாடகம் கல்வியாக வரவேண்டும் அதனைக் கற்றறிந்து செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தியவர்.

ஒன்றிணையப்போகும் ரணில் - சஜித் தரப்புகள்: செயற்குழு எடுத்துள்ள முடிவு

ஒன்றிணையப்போகும் ரணில் - சஜித் தரப்புகள்: செயற்குழு எடுத்துள்ள முடிவு

பல்கலைக்கழக நாடகத்துறை

ஜீ.சி.ஈ உயர்தரத்தில் நாடகத்தை ஒரு பாடமாகக் கொண்டுவர அவரது பங்களிப்பு முக்கியமானது. இதற்காக இலவசமாக நாடகத்தை பல ஆண்டுகள் கற்பித்தவர்.

யாழ். பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கியலும் பாடம் ஒரு துறையாக வளர்ச்சியடைந்துள்ளதென்றால் அதற்கு மூலகாரணமானவர்.

குழந்தை ம. சண்முகலிங்கம் மாணவர்கள் கற்பதற்காக ஏராளமான ஆங்கில நூல்களை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். யாழ்ப்பாண தேசிய கல்வியியல் கல்லூரியில் நாடகமும் அரங்கியலும் பாடத்தை ஆரம்பிக்க இவரது பணி முக்கியமானது.

தீயுடன் சங்கமம் ஆனார் ஈழத்து தமிழ் நாடகத்தின் ஆளுமை குழந்தை ம.சண்முகலிங்கம் | Dr M Shanmugalingam Passed Away

ஆசிரியர்களுக்கான நாடகக் களப்பயிற்சிகள் பலவற்றை நடத்தி ஆசிரியர்களை நாடகத்துறையில் உருவாக்கியவர். இவருக்கு நீண்ட மாணவர் பரம்பரை உண்டு.

தனது ஆசிரியர் பணி நிறைவடைந்ததும் இவர் நாடகத்துறையில் பல்கலைக்கழகத்தில் கற்ப்பிக்க ஆரம்பித்ததன் வழியாக நீண்ட மாணவர் பரம்பரையைக் கொண்டிருக்கிறார்.

இவரது தனி முயற்சியால் பல இளைஞர்கள் நாடகத்தைக் கற்று தேர்ந்து ஆசிரியர்களாகப் பணியாற்றுகிறார்கள். இவரது நாடகங்கள் சமூக அரசியல் நிலைமைகளைப் பேசியிருக்கின்றன.

மக்களோடு மக்களாக தொடருந்தில் பயணித்த போக்குவரத்து அமைச்சர்! வைரலாகும் காணொளி

மக்களோடு மக்களாக தொடருந்தில் பயணித்த போக்குவரத்து அமைச்சர்! வைரலாகும் காணொளி

அன்னாரது இறுதிக்கிரியை

தனது கருத்துக்களை நாடகத்தினூடாக சொல்வதில் எந்த சமரசத்துக்கும் செல்லாதவர். இவரது முக்கியமான நாடகங்களாக மண்சுமந்த மேனியர், எந்தையும் தாயும், அன்னையிட்ட தீ, ஆர்கொலோ சதுரர், கூடிவிளையாடு பாப்பா, பஞ்சவர்ணநரியார் போன்ற பலவற்றைக் குறிப்பிடலாம்.

தீயுடன் சங்கமம் ஆனார் ஈழத்து தமிழ் நாடகத்தின் ஆளுமை குழந்தை ம.சண்முகலிங்கம் | Dr M Shanmugalingam Passed Away

இவரது நாடகப்பணியைப் போற்றி கிழக்குப் பல்கலைக்கழகம் இவருக்கு கொளரவ கலாநிதி பட்டடம் வழங்கி கொளரவித்துள்ளது. இவரது இழப்பு ஈழத்து நாடக உலகிற்கு ஈடுசெய்ய முடியாதது. தனிமனிதனாக தன்னலம் கருதாது நாடகமும் அரங்கியலும் துறைக்கு அளப்பரிய பணியை ஆற்றியிருப்பதோடு, பல்கலைக்கழக நாடகத்துறையை உருவாக்கி வளர்த்த பெருமைக்குரியவர்.

அன்னார் வயது மூப்பின் காரணமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்படிருந்த நிலையில் தனது 93 வயதில் கடந்த 17ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் அன்னாரது பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு இன்று(20) அவரது இல்லத்தில் இறுதிக்கிரியைகள் இடம்பெற்ற பின்னர் திருநெல்வேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.

அதிர்வை ஏற்படுத்திய யாழ். கலாச்சார நிலைய பெயர் மாற்றம்: சர்ச்சைகளுக்கு மத்தியில் வரவேற்கும் மோடி

அதிர்வை ஏற்படுத்திய யாழ். கலாச்சார நிலைய பெயர் மாற்றம்: சர்ச்சைகளுக்கு மத்தியில் வரவேற்கும் மோடி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

கல்முனை, Montreal, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பரந்தன், வவுனியா, Borken, Germany

26 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Lausanne, Switzerland

25 Jul, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, நாவற்குழி, கொழும்பு

25 Jul, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Jul, 2025
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Meschede, Germany

23 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Chenevières, France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆலங்குளாய், சங்கானை, யாழ்ப்பாணம், Dammam, Saudi Arabia, Rheine, Germany, Rushden, United Kingdom

29 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, வெள்ளவத்தை

29 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுதுமலை, Markham, Canada

30 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உயரப்புலம், மாங்குளம், தோணிக்கல்

08 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், கொழும்பு 6

27 Jul, 2025
மரண அறிவித்தல்

சிலாபம், Viby, Denmark

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Markham, Canada

07 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொக்குவில், Toronto, Canada

19 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

28 Jul, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டகப்புலம், London, United Kingdom

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி, London, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, Datteln, Germany, Olfen, Germany

23 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
மரண அறிவித்தல்

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
மரண அறிவித்தல்

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Woodbridge, Canada

29 Jul, 2022
20ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

25 Jul, 2005
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024