பேருந்தை தள்ளிய மாணவிகள் - சாரதி, நடத்துனருக்கு ஏற்பட்டநிலை
பயணம் செய்தபோது இடைநடுவில் திடீரென பழுதாகிப்போன பேருந்தை மாணவிகளை கொண்டு தள்ளவைத்த குறித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் இருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தமிழ்நாடு நாகர்கோவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
திடீரென பழுதாகி நின்ற பேருந்து

நாகர்கோவிலில் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்த நிலையில் அதில் ஏராளமான கல்லூரி மாணவிகளும் பயணம் செய்தனர். இந்த நிலையில் திடீரென அந்த பேருந்து பழுதாகி நின்று விட்டது.
இதனை அடுத்து சாரதி மற்றும் நடத்துனர் கல்லூரி மாணவிகளை இறங்கி பேருந்தை தள்ள பயன்படுத்தியதாக தெரிகிறது. இது குறித்த காணொளி இணையத்தில் வைரலானதை அடுத்து போக்குவரத்து துறையின் பொது முகாமையாளர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதன்படி சாரதி மற்றும் நடத்துனர் உள்பட நான்கு பேர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.