சனத் நிஷாந்தவின் சாரதிக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
Sri Lanka
Sri Lankan Peoples
By Dilakshan
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஜீப் வண்டி சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், பாரவூர்தியின் சாரதியை பிணையில் விடுவிக்கவும் வெலிசர நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
நேற்றையதினம், கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழந்தார்.
இறுதிக்கிரியை
குறித்த விபத்தினால் உயிரிழந்த அமைச்சர் சனத் நிஷாந்தவின் உடல் புத்தளத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலும், சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்