திருமலை கடலில் கண்டெடுக்கப்பட்ட ஆளில்லா விமானம் : வெளியானது இறுதி அறிக்கை
திருகோணமலையை அண்மித்த கடற்பகுதியில் கடற்றொழிலாளர்களால் கண்டெடுக்கப்பட்ட ஆளில்லா விமானம்((Target drone), இலங்கைக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லையென தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆளில்லா விமானம் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவினால் வெளியிடப்பட்ட இறுதி அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த அறிக்கை விமானப்படை தளபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்திய நிறுவனத்திற்கு சொந்தமானது
மேலும் இந்த ஆளில்லா விமானம் இந்திய நிறுவனத்திற்கு சொந்தமானது என்பதும் இது பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்டதும் தெரியவந்துள்ளது.
கடந்த 27ஆம் திகதி திருகோணமலைக்கு அருகில் உள்ள கடலில் இந்த ஆளில்லா விமானத்தை கடற்றொழிலாளர்கள் கண்டுபிடித்தனர்.
இரண்டு வாரங்களாக இந்த ஆளில்லா விமானம் கடலில் இருந்ததாகவும், அதனை மீண்டும் தொடர்புடைய நிறுவனத்திடம் ஒப்படைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |