நவீன போரில் ஆபத்துக்களை அதிகரிக்கும் ஆயுதமாக மாறும் ட்ரோன்கள்!
கிழக்கு ஐரோப்பாவில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், ட்ரோன் போர் திறன்களை மேம்படுத்த உக்ரேனினின் உதவியை நாட போலந்து தீர்மானித்துள்ளது.
ஐரோப்பா மற்றும் மத்தியக்கிழக்கில் இடம்பெறும் தற்போதைய போர் சூழலுக்கு ட்ரோன்கள் மிக முக்கிய ஆயுதங்களாக பார்க்கப்படுகின்றன.
குறிப்பாக பெப்ரவரி 24, 2024 அன்று தொடங்கிய ரஷ்யா மற்றும் உக்ரைன் போரில் இன்றுவரை ட்ரோன்கள் ஏற்படுத்திய சேதங்கள் 70 - 80 சதவீதமாக கணக்கிடப்பட்டுள்ளது.
போலந்து பாதுகாப்பு
இந்த பின்னணியில் போலந்து பாதுகாப்பு அமைச்சர் கியேவுக்கு பயணம் செய்த நிலையில் குறித்த விடயங்கள் பேசப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சமீபத்தில் ரஷ்ய ட்ரோன்கள் போலந்து வான்வெளியை அத்துமீறி நுளைந்தைதை தொடர்ந்து குறித்த ஆதரவு கோரிக்கையில் போலாந்து குதித்துள்ளது.
இது நேட்டோவின் பாதுகாப்பில் உள்ள சாத்தியமான பாதிப்புகளை அம்பலப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது நடந்து வரும் ரஷ்யா - உக்ரைன் மோதல், ட்ரோன் தொழில்நுட்பத்தின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
நவீன போரில் ட்ரோன்கள்
இதன்படி ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்ததிலிருந்து, நவீன போரில் ட்ரோன்கள் ஒரு மைய அங்கமாக மாறிவிட்டன.

மேலும் போர்க்கள உத்திகளும் கணிசமாக மாற்றிவிட்டன. தாக்குதல் மற்றும் தற்காப்பு இராணுவ நடவடிக்கைகளில் அதன் முக்கிய பங்கைக் கருத்தில் கொண்டு, வேகமாக வளர்ந்து வரும் இந்த தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற நாடுகள் ஆர்வமாக உள்ளமையை சர்வதேச போரியல் ஆய்வாளர்கள் வியக்கியுள்ளனர்.
பெலாரஸ், ரஷ்யா மற்றும் உக்ரைன் எல்லையில் உள்ள அதன் கிழக்குப் பகுதியை வலுப்படுத்துவதன் மூலம் நேட்டோ சமீபத்திய நிகழ்வுகளுக்கு பதிலளித்துள்ளது. இந்த நடவடிக்கை பிராந்தியத்தில் பதட்டங்கள் தீவிரமடைந்து வருவதால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு ரஷ்யா பெலாரஸுடன் இணைந்து இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்வது அந்நாட்டின் நீண்டகால நோக்கங்கள் குறித்த மேலும் கவலைகளைத் தூண்டுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |