கடும் வறட்சி -நீரேரியில் மூழ்கிய கிராமம் வெளிவந்தது(படங்கள்)
Sri Lanka
By Sumithiran
இலங்கையில் தற்போது கடும் வறட்சியான காலநிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக ஆறுகள் குளங்கள் என்பவற்றில் நீர் வற்றி தரிசு நிலங்களாக காட்சியளிக்கின்றன.
இவ்வாறு பலாங்கொடை, பெலிஹுல் ஓயா பிரதேசத்தில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக சமனல குளத்தின் நீர் வெகுவாக குறைந்துள்ளது.
இலங்கையில் மிகவும் அழகான நீர்த்தேக்கம்

சமனல ஏரி இலங்கையில் மிகவும் அழகான நீர்த்தேக்கமாகும், இதன் பணிகள் 1987 இல் ஆரம்பிக்கப்பட்டு 1991 இல் பணிகள் நிறைவடைந்து திறக்கப்பட்டது.
வெளித்தெரியும் கிராமம்

சமனல ஏரி அமைக்கும் போது பழமை வாய்ந்த கிஞ்சிகுனே கிராமமும் ஏரி நீரில் மூழ்கியதுடன், இந்நாட்களில் நிலவும் கடும் வறட்சி காரணமாக நீர் வற்றி கிஞ்சிகுனே கிராமத்தில் அமைந்துள்ள பழமையான கங்காராம ஆலயத்தின் இடிபாடுகள் வெளி தெரிகின்றன.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி