யாழில் ஆட்கள் இல்லா வீடுகளில் போதைக் கும்பல் - அச்சத்தில் மக்கள்
போதைக்கு அடிமையானவர்கள் ஆட்கள் அற்ற வீடுகளில் ஒன்று கூடி போதையை நுகர்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் நகர்ப் பகுதி, மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஆட்கள் இல்லாது, பாழடைந்த வீடுகளில் மாலை வேளைகளில் ஒன்று கூடும் போதைக்கு அடிமையான கும்பல்கள், அந்த வீடுகளில் கும்பல் கும்பலாகப் போதைப் பொருட்களை நுகர்ந்து கொள்கின்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர்கள் வீடுகளுக்குள் இருந்து பெரும் குரல் எழுப்பி சத்தங்களையும் எழுப்புவதனால், அவ்வீடுகள் அமைந்துள்ள வீதிகளால் பயணிப்போர் அச்சத்துடனேயே பயணிக்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் கோரிக்கை

யாழில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருகிறது.
அத்துடன் ஊசி மூலம் போதைப்பொருளை உட்செலுத்திக் கொள்பவர்களால், அதிகளவில் போதையை உட்செலுத்துவதாலும், தொடர்ந்து போதையை நுகர்வதால் கிருமித் தொற்றுக்கு இலக்காகியும் உயிரிழப்புக்கள் ஏற்படும் சம்பவங்களும் அதிகரித்துள்ளது.
சந்தேகத்திற்கு உரிய இடங்களில் காவல்துறையினர் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் எனக் குறித்த பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.