தரமற்ற தடுப்பூசி இறக்குமதி தொடர்பில் கைதான விஜித் குணசேகரவுக்கு விளக்கமறியல்
CID - Sri Lanka Police
Sri Lankan Peoples
Ministry of justice Sri lanka
By Dilakshan
தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி வைத்திய விஜித் குணசேகர எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவர் இன்று (09) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி விஜித் குணசேகர நேற்று (08) கைது செய்யப்பட்டார்
கைது நடவடிக்கை
இதன்போது, சுமார் 10 மணித்தியாலங்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னரே அவர் கைது செய்யப்பட்டார்.
குறித்த கைது நடவடிக்கையானது, தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி இறக்குமதி தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் அவர் வாக்குமூலம் வழங்கிய பின்னரே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்