யாழில் போதைப்பொருள் வைத்திருந்தவருக்கு 7 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை
யாழ்ப்பாணத்தில் 1.44 கிராம் போதைப்பொருள் வைத்திருந்தவருக்கு 7 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கு இன்று (13.05.2026) யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் கடந்த 2021 மார்ச் மாதத்தில் 1.44 கிராம் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.
சாதாரண சிறைத்தண்டனை
அத்துடன், குற்றவாளிக்கு 1 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், அபராதத் தொகையை செலுத்தத் தவறினால், மேலதிகமாக 12 மாதங்கள் சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் நீண்டகாலமாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்துள்ளது.
குறித்த வழக்கின் தொடருநர் தரப்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் அரச சட்டத்தரணி ஒருவர் முன்னிலையாகியமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |