தமிழர் பகுதியில் சிக்கிய பெருமளவு போதைப்பொருள்
மன்னார் (Mannar) - பேசாலை கடற்கரைப் பகுதியில் சுமார் 218 கிலோ 800 கிராம் கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பேசாலை கடற்கரையில் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையின் போது, அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான டிங்கி படகில் இருந்த கேரள கஞ்சாவை கடற்படை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி சுமார் 87 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என கடற்படை (Sri lanka Navy) தெரிவித்துள்ளது.
காவல் நிலையத்தில் கையளிப்பு
கடற்படை நடவடிக்கைகளின் காரணமாக கரைக்கு கொண்டு வர முடியாமல், கடத்தல்காரர்கள் பேசாலை கடற்கரையில் டிங்கி படகை கைவிட்டிருக்கலாம் என்று கடற்படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் மற்றும் டிங்கி படகை சட்ட நடவடிக்கைகளுக்காக பேசாலை காவல் நிலையத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
