துபாயில் வெடிப்புச் சத்தம்...! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
துபாய் நகரின் மையப்பகுதியில் பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும், துபாய் அரசாங்க ஊடக அலுவலகம் (Dubai Media Office) இந்தத் தகவல்களை உடனடியாக மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நகரின் மையப்பகுதியில் எவ்வித வெடிப்புச் சத்தங்களும் கேட்கவில்லை என்றும் இத்தகைய செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்றும் தெளிவுபடுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தவறான செய்தி
அத்தோடு, இவ்வாறான தவறான செய்திகளைப் பரப்பும் ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் துபாய் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அண்மைய வளைகுடா பிராந்திய பதற்றங்களுக்கு மத்தியில், ஈரான் நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தடுத்து அழித்ததாகவும், அதன் சிதறல்கள் சில துபாய் மற்றும் அபுதாபி பகுதிகளில் விழுந்து சேதத்தை ஏற்படுத்தியதாகவும் சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்த பின்னணியில் இச்சம்பவம் பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |